அபோகலிப்ஸ் சென்சார் கிட் பயனர் கையேடு
• சஹான் பண்டிதரத்னவினால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது
அபோகலிப்ஸ் சென்சார் கிட் பயனர் கையேடுக்கு வரவேற்கிறோம்.
அபோகலிப்ஸ் சென்சார் கிட் தோட்டக்கலைக்கானது. இது ஒரு மலிவான, DIY வன்பொருள் மற்றும் மென்பொருட்களின் தொகுப்பாகும், அதை நீங்களே ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம், தரையில் நட்டு ஒளியின் அடர்த்தி, மண்ணின் ஈரப்பதன், சுற்றாடல் ஈரப்பதன் மற்றும் வெப்பநிலை ஆகிய அளவீடுகளைப் பெறலாம் - உங்களுடைய உருளைக்கிழங்கு செடிகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிய முயற்சிக்கும்போது பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இத் தகவல்கள் உங்கள் கையடைக்க தொலைபேசி செயலிக்கே வருகின்றன.
இது கொஞ்சம் அசிங்கமாக இருக்கிறதென்றால், அதற்கு வடிவமைப்புதான் காரணமாகும். ஒரு உள்ளூர் ஹாட்வெயார் கடையில் விரைவாகச் சென்று கொள்வனவு செய்யக்கூடியதாகவும், சராசரி இலங்கை எலக்ட்ரோனிக்ஸ் கடையொன்றுக்கு சிறிய பயணத்துடன் பெற்றுக் கொள்ளக்கூடியதாவும் இருக்கக்கூடிய பொருளொன்றை உருவாக்க நாங்கள் விரும்பினோம். இந்தப் பொருளின் பாகங்கள் (PVC குழாய்கள், உள்ளே உள்ள அமைப்புகள்) மாற்றுவதற்கு மலிவானவை, நீர் மற்றும் UV இனால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ளத்தக்க வலுவானவையாகும். மேலும் LKR 8,200 (2024 இன் படி) க்கு பெற்றுக் கொள்ளலாம். முழுமையான வடிவமைப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முழுமையான பயன்பாட்டு வழிகாட்டல் ஆகியவற்றை நாம் வழங்கியுள்ளோம் - எனவே நீங்கள் அதை அப்படியே உருவாக்கலாம் அல்லது மேம்படுத்தலாம் அல்லது PCB ஐ அச்சிடலாம் (ஆனால் அதற்கு அதிக செலவாகும்).
இந்த சென்சார்கள் வலுவேற்றம் செய்வதற்கு சூரிய மின்கலங்களைக் கொண்டுள்ளன, மேலும் சூரிய ஒளியில் வலுவேற்றம் செய்யாமல் சராசரியாக இரண்டு மாதங்கள் வரை இருக்கும். அவை LoRA வழியாக ஒரு ரிசீவருடன் (LKR 3850) இணைக்கப்பட்டுள்ளன, இது ஒரு நீண்ட தூர கம்பியில்லா தகவல்தொடர்பு முறையாகும், இது அவற்றிற்கு உச்சபட்ச கிலோமீட்டர் வரம்பைக் கொடுக்கிறது (அதாவது நீங்கள் அவற்றை ஒரு பண்ணையின் தொலைதூர இடத்தில் பொருத்தலாம்). அது பெறுநர் கையடக்க தொலைபேசி செயலியுடன் (ஆண்ட்ராய்டு) தொடர்பு கொள்கின்றது, அது உங்களுக்கான தரவைக் காட்சிப்படுத்துவதோடு சென்சர்களின் கொத்தணிகளை பெயரிடவும் கண்காணிக்கவும் உங்ளுக்கு உதவுகின்றது.
இது மிகவும் நவீன பண்ணை கண்காணிப்பு உபகரணங்களின் அதே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, ஆனால் இது மிகவும் மலிவானது. இது எமது அபோகலிப்ஸ் கார்டன் விக்கியுடன் பயன்படுத்தப்பட வேண்டும், இது இலங்கையில் சுமார் 70+ வளரும் பயிர்களையும் - மற்றும் அவற்றிற்கு தேவையான நிலைமைகளையும் உள்ளடக்கியுள்ளது.
புதிதாக இந்த சாதனத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், முழு ஆவணத்தைப் பார்க்கவும் full documentation. இந்த கையேடு விவசாய கட்டமைப்புகளில் சுற்றுச்சூழல் நிலைமைகளை கண்காணிக்க உங்கள் சென்சார் நெட்வொர்க்கின் வரிசைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு மூலம் உங்களுக்கு வழிகாட்டும். உங்களுக்கு சில தொழில்நுட்ப நிபுணத்துவம் இருப்பதாக இது கருதுகிறது (இல்லையென்றால், உங்களுக்கு உதவ ஒரு நண்பரின் உதவியைப் பெறுங்கள்!)
1. நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்
இந்த முறைமை மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது:
1. சென்சார் தொகுதிகள்: சுற்றுச்சூழல் தரவைச் சேகரிக்கும் மின்கலன்களால் இயங்கும் சாதனங்கள்.
2. ரிசீவர் சாதனம்: சென்சார் தொகுதிகளிலிருந்து தரவைப் பெற்று சேமிக்கும் ஒரு முக்கிய மையம்.
3. கையடக்கத் தொலைபேசி செயலி : சேகரிக்கப்பட்ட தரவை காட்சிப்படுத்துவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்குமானது.
ஆரம்பிப்பதற்கு முன்னதாக உங்களிடம் தேவையான கருவிகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
1. சவள் அல்லது கம்பத்துளை தோண்டி.
2. கம்பி வெட்டிகள் அல்லது சிறிய கத்தரிக்கோல்.
3. ஸ்க்ரூட்ரைவர்கள்
4. கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள்
2. ஈடுபடுத்துதல்
1. நிழல், சென்றடையக்கூடிய தன்மை மற்றும் சாத்தியமான தடைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் பயிர்களுக்கு அருகிலுள்ள இடத்தைத் தேர்வு செய்யவும்.
2. கம்பத்துளை தோண்டியினைப் பயன்படுத்தி சுமார் 1 அடி ஆழத்தில் ஒடுக்கமான குழியொன்றினைத் தோண்டவும்.
3. துளைக்குள் PVC ஸ்டாண்ட்பைப்பைச் செருகவும், அதன் மட்டநிலை மற்றும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தவும்.
4. உங்கள் பயிர்களுக்குத் தகுந்த ஆழத்தில் ஸ்டாண்ட் பைப்பை அடுத்ததாக மண்ணின் ஈரப்பத சென்சரை நிறுவவும்.
5. சென்சர் கம்பிகளை பைப் வழியாக அனுப்பவும், அவற்றை ஒழுங்கமைக்க ஸிப் டை அல்லது கேபிள் கிளிப்களைப் பயன்படுத்தவும்..
6. சூரிய சக்தி பேனலை இணைக்கவும், நாள் முழுவதும் உகந்த சூரிய ஒளி கிடைக்கின்றதா என்பதை சரிபார்க்கவும்.
7. அனைத்து கம்பிகளையும் சர்க்யூட் போர்டில் இணைக்கவும், சீல் செய்வதற்கு முன் இணைப்புகளை இருமுறை சரிபார்க்கவும்.
8. டிஎச்டி11 சென்சாரை ஸ்டாண்ட்பைப்பிற்குள் வைக்கவும், ஈரப்பதனைத் குறைக்க டெசிகண்ட் பொதியினைச் சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தவும்.
9. அனைத்து இணைப்புகளையும் சரிபார்த்து, சிலிகான் முத்திரையிடுவதற்கு மெழுகு நாடாவினை அல்லது நீர்புகா டேப்பைப் பயன்படுத்தி அடைப்பை மூடவும்.
3. ரிசீவர் சாதனத்தின் அமைப்பு
1. போதுமான காற்றோட்டம் மற்றும் தொடராக மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்தி ஒரு கூரையின் கீழ் ரிசீவரை வைக்கவும். அதை வீட்டிற்குள் வைத்திருப்பதை பரிந்துரைக்கிறோம்.
2. கேபிள் இணைப்புகள் அல்லது ஒட்டும் பொருள் மூலம் அனைத்து சாதனங்களும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
3. முடிந்தால், சிறந்த அமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ரிசீவரை சுவரில் பொருத்தவும்.
4. கையடக்கத் தொலைபேசி செயலி
1. இந்த ரெப்போவில் உள்ள 'வெளியீடுகள்' (Releases ) பிரிவில் இருந்து பதிவிறக்குவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் இச் செயலியினை நிறுவவும்.
2. செயலியை துவக்கி, 'இணைப்பைப் பெறுதல்' (Connect Receiver) பகுதிக்குச் செல்லவும்.
3. புளூடூத் சாதனங்களை பெறுவதற்கு ஸ்கேன் செய்து உங்கள் ரிசீவரைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இணைக்கப்பட்டவுடன் சென்சார் தரவைப் பார்க்கலாம், சாதனங்களை உங்களுக்கு ஏற்றவாறு முகாமை செய்து வாசிப்புகளை பகுப்பாய்வு செய்ய முடியும்.
5. சென்சார்களை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அவற்றை மறுபெயரிடலாம்.
முக்கிய அம்சங்கள்:
செயலியின் இடைமுகத்தின் ஸ்கிரீன்ஷொட்களுடன் நிகழ்நேர சென்சார் தரவைப் பார்ப்பது வரைபடங்கள் மற்றும் தரவுகளை விளக்குவதற்கான உதவிக்குறிப்புகள் கொண்ட வரலாற்றுத் தரவு பகுப்பாய்வு சாதன முகாமைத்துவம் (சென்சர்கள் மற்றும் றிசீவர்களைச் சேர்த்தல்/திருத்துதல்/அகற்றுதல்) தரவுகளைப் பார்ப்பதற்கான பிரத்தியேக நேர வரம்புத் தேர்வு தரவேற்றம் மற்றும் கூட்டுப்பணி அல்லது மேலும் பகுப்பாய்வுக்காக பகிர்தல்.
5. பராமரிப்பும் சரிசெய்தலும்
1. பதிவுகளை மாதந்தோறும் மீளாய்வு செய்தல், செய்த பணிகள் மற்றும் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பான பதிவேட்டைப் பேணுதல்.
2. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் சென்சார் முனைகளை சோதனை செய்தலும் கம்பிகள் சேதமடைந்துள்ளனவா என்பது தொடர்பில் சோதனை செய்யவும்.
3. சூரிய மின் கலன்களை தேவைக்கேற்ப சரிபார்த்து சுத்தம் செய்தல் தூசி படிவதைத் தடுக்க அழுத்தக் காற்றைப் பயன்படுததுதல்.
4. விரைவான பழுதுபார்ப்பு அல்லது மாற்றீடுகளுக்கு உதிரிப் பாகங்களை (சென்சார்கள், கம்பிகள், முதலியன) வைத்திருத்தல்.
சரிசெய்தல்:
1. சென்சார் தொகுதி LED வேகமாக விட்டு விட்டு ஒளிர்ந்தால் சென்சார் இணைப்புகளைச் சரிபார்க்கவும். சரியாக இணைக்கப்படும் வரை அது விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
2. ரிசீவர் பிரச்சினைகளுக்கு, கட்டளை இரேகை இடைமுகத்தைப் (CLI) பயன்படுத்தி பதிவுக்குச் சென்று, வழங்கப்பட்ட விளக்கப்படம் அல்லது தீர்மான விளக்கப்படத்தைப் (flowchart or decision tree) பயன்படுத்தி பிரச்சினைகளைக் கண்டறியவும்.
3. விரிவான வழிகாட்டுதலுக்கு முழு ஆவணத்தில் உள்ள 'பராமரிப்பு மற்றும் சரிசெய்தல்' பகுதியைப் பார்க்கவும் அல்லது மேலதிக உதவிக்கு தொழில்நுட்ப உதவி / சமூக மன்றங்களைத் தொடர்பு கொள்ளவும்.
பொதுவாக, கம்பிகளில் துருக்கள் இல்லை என்பதையும், அனைத்தும் நன்றாக சீல் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மின்கலன்களின் ஆயுட்காலம் :
1. சென்சார் தொகுதிகள் சூரிய மின்சக்தி இல்லாமல் சுமார் இரண்டு மாதங்களுக்கு மின்கலன்களில் இயங்கும். விரைவாக மாற்றுவதற்கு உதிரி மின்கலன்களை கையில் வைத்திருங்கள்.
2. ஒரு தொகுதி இயக்கத்தினை நிறுத்தினால், மின்கலன்களின் மற்றும் சூரிய மின்சக்தி இணைப்புகளைச் சரிபார்க்கவும்.
3. பழைய மின்கலன்களை முறையாக அப்புறப்படுத்தவும் அல்லது மீள்சுழற்சி செய்யவும்.
6. கட்டளை இரேகை இடைமுகம் - (Command Line Interface -CLI)
ரிசீவர் சாதனம், மேம்பட்ட சரிசெய்தல் மற்றும் நிருவாகத்திற்கான கட்டளை இரேகை இடைமுகத்தினை CLI ஐ வழங்குகிறது. பின்வரும் கட்டளைகளுக்குள் செல்ல ரிசீவரின் சீரியல் போர்ட்டுடன் (serial port) இணைக்கவும்:
கட்டளைகள்:
• LS : தற்போதைய விபரக் கொத்திலுள்ள அனைத்து கோவைகள் மற்றும் விபரக் கொத்துக்களை பட்டியல்படுத்து.
• READ <file> : குறித்துரைக்கப்பட்ட கோவையினை வாசி
• CD <dir> : குறித்த விபரக் கொத்தில் மாற்றம் செய்
• DEL <file> : குறித்துரைக்கப்பட்ட கோவையினை அழி
• FLASHINFO :எஸ்.பீ.ஐ. பிளெஷின் மொத்த மற்றும் பயன்படுத்தப்பட்ட கொள்ளளவினைக் காட்டு
• USAGE : பைட்ஸ் மற்றும் சத வீதத்தின் பிரகாரம் பயன்படுத்தப்பட்ட கொள்ளளவினைக் காட்டு
• SETTIME HH:MM:SS: RTC நேரத்தினை ஒழுங்குபடுத்து
• SETDATE YYYY-MM-DD: RTC திகதியினை ஒழுங்குபடுத்து
• DATETIME: தற்போதைய திகதியினையும் நேரத்தினையும் ஒழுங்குபடுத்து
• HELP: பட்டியலாக்கக் கட்டளையினைக் காட்டு
தரவுகளை நிருவகிக்கவும், கணினி நிலையை சரிபார்க்கவும், தேவைக்கேற்ப சிக்கல்களைக் கண்டறியவும் இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தவும்.
ஏதேனும் மேலதிக உதவி அல்லது கேள்விகளுக்கு, முழு ஆவணத்தைப் documentation பார்க்கவும்.
உரிமம்
எம்ஐடி உரிமத்தின் கீழ் எங்கள் சேவை வழங்கப்படுகிறது -
இந்த மென்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணக் கோப்புகளின் ('மென்பொருள்') நகலைப் பெறும் எந்தவொரு நபருக்கும், மென்பொருளைப் பயன்படுத்துவதற்கும், நகலெடுப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும், ஒன்றிணைப்பதற்குமான உரிமைகள் உட்பட, கட்டுப்பாடுகள் இல்லாமல் மென்பொருளைக் கையாள்வதற்கு, இதன்மூலம் அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது. மென்பொருளின் நகல்களை வெளியிடுதல், விநியோகம் செய்தல், உப உரிமம் வழங்குதல் அத்துடன் / அல்லது விற்பனை செய்தல் மற்றும் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மென்பொருள் வழங்கப்பட்ட நபர்களை அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலே உள்ள பதிப்புரிமை அறிவித்தலும் இந்த அனுமதி அறிவித்தலும் மென்பொருளின் அனைத்து நகல்களிலும் அல்லது கணிசமான பகுதிகளிலும் சேர்க்கப்படுதல் வேண்டும்.
வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல், 'உள்ளபடியே' மென்பொருள் வழங்கப்படுகிறது, ஆனால் வர்த்தகத்திற்கான உத்தரவாதங்கள், குறித்த நோக்கத்திற்கான உறுதி நிலை மற்றும் விதிகளை மீறாமை என்பனவற்றிற்கு மட்டுப்பாடுகளற்றது.
மென்பொருள் தொடர்பில் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும், சேதங்களுக்கும் அல்லது ஏனைய பொறுப்புகளுக்கும், ஒப்பந்தத்தின் செயலாக இருந்தாலும் சரி, அல்லது வேறுவிதமாகவோ அல்லது அதன் காரணமாக எழும் பிரச்சினைகளுக்கு, பயன்பாடு அல்லது பிற மென்பொருளின் வேறு விடயங்கள் தொடர்பில் தாபகர்கள் அல்லது காப்புரிமைதாரர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்,
அங்கீகாரங்கள்
LIRNEasia ஆல் நடத்தப்படும் பன்மைத்துவ, உள்ளடக்க மற்றும் உண்மை அடிப்படையிலான பொதுக் கருத்துகளுக்கு வலுப்படுத்துவதற்கான கருவிகளை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, Watchdog Sri Lanka ((Appendix) மூலம் இந்தப் பணி உருவாக்கப்பட்டது. LIRNEasia (www.lirneasia.net) என்பது ஏழைகளுக்கு ஆதரவான, சந்தைக்கு ஆதரவான பிராந்திய டிஜிட்டல் கொள்கை சிந்தனைக் குழுவாகும். ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மன் சமஷ்டி வெளிவிவகார அலுவலகமும் இணைந்து நிதியளிக்கும் இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. SCOPE என்பது நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து GIZ இனால் செயல்படுத்தப்படுகிறது.